சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் சுகாதார பாதுகாப்பு சமுதாய நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை
Posted On:
17 JAN 2023 4:15PM by PIB Chennai
அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார பாதுகாப்பு வசதிகளை உருவாக்குவதை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முனைப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை சுவிட்சர்லாந்தின் டாவோஸில் சுகாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு சமுதாய நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பு சேவை என்பதே மத்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தின் பிரதான குறிக்கோள் என்றும், இதற்கு ஏதுவாக உலகின் மிகப்பெரிய சுகாதார உறுதியளிப்புத் திட்டமான பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதார நல மையங்களை உருவாக்கி சராசரியாக 50 கோடி பேருக்கு சுகாதார வசதியை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
மருந்துத் துறையில் இந்தியாவின் மாபெரும் பங்களிப்பு குறித்து பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மரபியல் மருந்துகளை தயாரிப்பதில் இந்தியா முன்னணி வகிக்கிறது என்றார். மருந்து சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் மையமாக இந்தியா மாறிவருவதாகவும் குறிப்பாக அதிநவீன வசதிகளின் உதவியுடன் நோய்களை கண்டறியும் சேவைகளை வழங்குவதில் முன்னணியாக திகழ்வதாகவும் டாக்டர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனியின் சுகாதாரத் துறை அமைச்சர், ஜாம்பியாவின் நிதியமைச்சர், அங்கோலாவின் நிதியமைச்சர், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர், உலக பொருளாதார கூட்டமைப்பின் நிர்வாகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1891791
**********
PKV/ES/PK/KRS
(Release ID: 1891824)
Visitor Counter : 156