இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
உடல் தகுதி இந்தியா இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள சிறு தானியங்கள் பற்றிய சிறப்பு அம்சங்களுடன் கூடிய சிறப்பு தொடர் உரை நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்பு
Posted On:
15 JAN 2023 7:07PM by PIB Chennai
உடல் தகுதி இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள “ஹெல்தி ஹிந்துஸ்தான்” என்ற தலைப்பிலான தொடர் உரை நிகழ்ச்சிகள் தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், ஜனவரி 15, ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். சிறுதானிய அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இந்த உரை நிகழ்ச்சியில் சிறப்புப் பகுதிகள் இடம்பெறும்.
உடல் தகுதி நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கும் இணையதள சிறப்புப் பேச்சு நிகழ்ச்சியான (டாக் ஷோ) இந்தத் தொடர், 2023 ஜனவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெறும். இது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு ஃபிட் இந்தியா இயக்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் இன்ஸ்டாக்ராம் தளங்களில் ஒளிபரப்பப்படும்.
இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் இன்று பேசிய திரு அனுராக் தாக்கூர், ஃபிட் இந்தியா (உடல் தகுதி இந்தியா) இயக்கத்தில் பங்கேற்றுள்ள அனைத்து வல்லுநர்கள் மற்றும் பிரபலங்களின் விழிப்புணர்வுப் பிரசாரங்களைப் பாராட்டினார். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இதற்காக நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என்று திரு அனுராக் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்தார்.
*****
PLM / DL
(Release ID: 1891449)
Visitor Counter : 182