மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு ஷில்லாங்கில் அமையவுள்ளது: மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 13 JAN 2023 5:04PM by PIB Chennai

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் மூலம்  டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிறுவன முனையத்தின் கீழ் இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டிற்கென முதல் சிறப்பு அமைப்பு   ஷில்லாங்கில் மார்ச் 2023-க்குள் அமையவுள்ளது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தெரவித்துள்ளார்.

“வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம், அடுத்த தலைமுறை ஆன்லைன் விளையாட்டு சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஷில்லாங், கொஹிமா மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து அதிக அளவில் வரவேண்டும் என்பது இலக்காகும்” என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், இந்த ஆன்லைன் விளையாட்டு குறித்து பொதுமக்கள் ஆலோசனை கேட்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் 2021-ல் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.

***

AP/GS/KPG/RJ


(Release ID: 1891056) Visitor Counter : 227


Read this release in: English , Urdu , Hindi , Telugu