மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை ஆணையர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்ற ‘ஆண்டு செயல்திட்டம் தயாரித்தல்’தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கம் மத்திய மீன்வளத் துறை சார்பில் நடத்தப்பட்டது

प्रविष्टि तिथि: 13 JAN 2023 2:18PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறை அதிகாரிகளால் மீன்வளத்துறைத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படும் நோக்கிலும், தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும், 2023 ஜனவரி 4 முதல் 5 வரை இரண்டு நாள் ‘ஆண்டு செயல்திட்டம் தயாரித்தல்’ தொடர்பான பயிலரங்கை மத்திய அரசின் மீன்வளத் துறை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய மீன்வளத் துறை, தேசிய மீன்வள வாரியம் (NFDB) மற்றும் மாநிலங்களின் மீன்வளத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்த பயிலரங்கம் மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமையில் நடைபெற்றது. 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து மொத்தம் 47 அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

பயிலரங்கத்தின் தொடக்க அமர்வில் பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்), மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் (எஃப்ஐடிஎஃப்) மற்றும் கிசான் கடன் அட்டை (கேசிசி) போன்ற தற்போதைய துறைசார் திட்டங்களின் சாதனைகளை மத்திய மீன்வளத்துறையின் இணைச் செயலாளர் எடுத்துரைத்தார்.

மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் தமது தொடக்க உரையில், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்ததுடன் உள்ளூர் அளவில் இத்திட்டங்கள் முழுமையாகச் சென்றடைய முன்னுரிமை அளித்து செயல்படுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வலியுறுத்தினார். தொடக்க அமர்விற்குப் பிறகு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டன.

பயிலரங்கின் இரண்டாவது நாளில், பல்வேறு அம்சங்கள் தொடர்பாக குழு விவாதங்கள் நடைபெற்றன. 2023-24 மற்றும் 2024-25 –ம் ஆண்டுகளுக்கான வருடாந்திர செயல் திட்ட உத்திகளை உருவாக்குவது குறித்தும் இந்தப் பயிலரங்கில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

***

AP/PLM/RJ


(रिलीज़ आईडी: 1890990) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu