நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிஐஎஸ் தர விதிகளை மீறி பொம்மைகளை விற்பனை செய்த இ-வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

Posted On: 12 JAN 2023 4:43PM by PIB Chennai

பிஐஎஸ் தர விதிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறி பொம்மைகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் ஆகிய இ- வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீசுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், நுகர்வோர் பாதுகாப்பு விதி 2019-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலையீட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தர அமைப்பின்  இயக்குநருக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 

போலி  மற்றும் கலப்பட பொம்மைகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நீட்டித்துள்ளது.

இதேபோல், தரக்கட்டுபாட்டு விதிகளை மீறி மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வகை செய்யும் விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

மேலும் விதிகளை மீறும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் குறித்தும் நாடு முழுவதும் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

***

SM/ES/RS/PK



(Release ID: 1890802) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Marathi , Hindi