பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்திய தொழில்கூட்டமைப்பின் 11-வது உயிரி - எரிசக்தி மாநாட்டில் திரு ஹர்தீப் எஸ் பூரி உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JAN 2023 6:14PM by PIB Chennai
இந்திய தொழில்கூட்டமைப்பின் 11-வது உயிரி - எரிசக்தி மாநாட்டில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த 2013 -14-ஆம் ஆண்டில் எத்தனால் கலந்த பெட்ரோல் உற்பத்தி 1.53 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அது 10.17 சதவீதமாக அதிகரித்ததாகத் தெரிவித்தார்.
எரிசக்தி பாதுகாப்பை அடைவதுடன் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், வைக்கோல் மற்றும் மூங்கிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்வதற்கு 2 சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படுவதாக திரு பூரி குறிப்பிட்டார்.
2030-ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் டன் அளவிற்கு உற்பத்தி செய்வதற்கான இலக்குடன் பசுமை ஹைட்ரஜன் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக திரு பூரி கூறினார்.
***
SM/IR/KPG/PK
(வெளியீட்டு அடையாள எண்: 1890795)
வருகையாளர் எண்ணிக்கை : 234