மத்திய அமைச்சரவை
பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
11 JAN 2023 3:33PM by PIB Chennai
கூட்டுறவு மற்றும் அதோடு தொடர்புடைய அமைப்புகளின் சரக்குகள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதற்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தகத்துறை, வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆதரவுடன் பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்கள் கூட்டுறவு ஏற்றுமதி சங்கம் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டுறவுத் துறையின் ஏற்றுமதியை மேம்படுத்த இச்சங்கம் முக்கிய காரணியாக திகழும். சர்வதேச சந்தையில் இந்திய கூட்டுறவு துறை பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய இது உதவிடும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் பல்வேறு ஏற்றுமதி தொடர்புடைய திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு இச்சங்கம் உதவிகரமாக இருக்கும்.
***
IR/AG/RJ
(रिलीज़ आईडी: 1890345)
आगंतुक पटल : 309
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada