இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இளம் விஞ்ஞானிகளுக்கு அதிகாரமளிக்கும் கொள்கைக்கான உள்ளீடுகள் குறித்த சர்வதேச இணையவழி கருத்தரங்கம்

Posted On: 11 JAN 2023 11:20AM by PIB Chennai

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், இந்திய தேசிய இளையோர் அறிவியல் அகாடமி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து ‘இளம் விஞ்ஞானிகளுக்கு அதிகாரமளிக்கும் கொள்கைக்கான உள்ளீடுகள்’ என்ற தலைப்பில் சர்வதேச இணைய வழி கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.

அடுத்த தலைமுறை இளம் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை வளர்ப்பதற்காக ஒரு புதிய கொள்கை ஆவணத்தில் உள்ளீடுகளை தொகுக்கும் நோக்கத்தோடு இளம் விஞ்ஞானிகளுக்கு அதிகாரமளிக்கும் முதன்மை அறிவியல் ஆலோசகரின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 9, 2023 அன்று இந்த இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்துகொண்ட அழைப்பாளர்கள், தங்களது கருத்துகளை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பேங்காக், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு நிதி ஆதரவு, தங்களுக்கு விருப்பமான துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் சுதந்திரம், வன் மற்றும் மென் திறன்களின் மேம்பாடு, சர்வதேச கூட்டுமுயற்சியில் ஈடுபடுவதற்கான நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகள் இறுதிக் கொள்கை ஆவணத்தில் இடம்பெறும்.

கருத்தரங்கில் பேசிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் கே. சூட், எதிர்கால இந்தியாவிற்கான முதலீடாக இளம் விஞ்ஞானிகளுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1890179

***

TV/RB/RJ



(Release ID: 1890254) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi , Telugu