வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வாரம் நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது

Posted On: 10 JAN 2023 5:20PM by PIB Chennai

தேசிய ஸ்டார்ட்அப் தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வார கொண்டாட்டங்கள் இன்று தொடங்கின. 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றன.

தில்லி விஞ்ஞான் பவனில் தொழில் மற்றும் உள்நாட்டு வணிக ஊக்குவிப்பு துறை (டிபிஐஐடி) சார்பில் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வதற்கான மாற்று முதலீட்டு நிதியம் தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் சிறு தொழில் மேம்பாட்டு வங்கி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின்  பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹைதராபாத், மும்பை, வாரங்கல் உள்ளிட்ட நகரங்களிலும் ஸ்டார்ட்அப் புதுமை வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை, வேளாண் வணிக தொழில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற  நிகழ்ச்சியை  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி  தொடங்கிவைத்தார். இதில் 120 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்து 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வேளாண் கல்வி பிரிவின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ராகேஷ் சந்திரா தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

SMB/PLM/RS/KPG


(Release ID: 1890094) Visitor Counter : 212