அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புத்தாக்க சிந்தனைகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கே எதிர்காலம்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
08 JAN 2023 5:56PM by PIB Chennai
புத்தாக்க சிந்தனைகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கே எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு);
புவி அறிவியல் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம்;
பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஒரு பிரத்யேக நேர்காணலில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க பின்னணியில் தான் 2023 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சிப் பாதைகள் அமையும் என்றார்.
உலகம் 21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டை முடிவுக்குக் கொண்டுவரும் விளிம்பில் உள்ளது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், அடுத்த சில ஆண்டுகளில் அந்த 21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டு என்று நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியாவில் அறிவியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைந்துள்ளது. ஏனெனில் பிரதமர் உலகளவில் நமது முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த பல கடந்தகால நடைமுறைகளை மாற்றியதன் விளைவாக ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.
நமது அறிவியல் சாதனைகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உதவியது மட்டுமல்லாமல், நமது அறிவியல் ஆற்றலை உலகம் முழுவதும் கொண்டு சென்று நம் நாட்டின் மதிப்பை டாக்டர் ஜிதேந்திர சிங் உயர்த்தியுள்ளார் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டதை அவர் நினைவு கூர்ந்தார். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான முன்னணி அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று இந்தியர்களால் வழிநடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் சர்வதேச அரங்கில் ஜி-20 தலைமைத்துவம் மற்றும் "சர்வதேச தினைப்பயிர் ஆண்டு" கடைப்பிடிக்கும் தேசமாக சர்வதேச அரங்கில் இந்தியா மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது என்று அமைச்சர் கூறினார்.
ட்ரோன் கொள்கை முதல் நீலப் பொருளாதாரம் வரை, விண்வெளித் துறையில் புதிய மாற்றங்கள் முதல் புவியியல் வழிகாட்டுதல்கள் வரை, நடப்பு நூற்றாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் இந்தியாவை உலக அரங்கில் முதன்மையான இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது என்றார்.
*****
MS/GS/DL
(Release ID: 1889629)
Visitor Counter : 170