விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா விருது 2022: வேளாண் அமைச்சகத்தின் மின்னணு தேசிய வேளாண் சந்தை முன்முயற்சி, பிளாட்டினம் விருதை வென்றது

Posted On: 07 JAN 2023 2:56PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்முயற்சியான இ-நாம், இன்று புது தில்லியில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளிக்கும் பிரிவில் பிளாட்டினம் விருதை வென்றுள்ளது.  நிகழ்ச்சியில்  தலைமை விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2022 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கினார். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே  துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில், வேளாண் அமைச்சகத்தின்  இணைச் செயலாளர் டாக்டர். என்.விஜயலட்சுமி  இந்த விருதை பெற்றுக் கொண்டார்

22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1260 ஏபிஎம்சி மண்டிகளை ஒருங்கிணைத்து, 203 விவசாயம் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்தை எளிதாக்குவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சிறந்த லாபகரமான விலையை அடைய இ-நாம் உதவுகிறது.  மண்டி செயல்பாடுகள் மற்றும் விவசாயப் பொருட்களின் மின் வர்த்தகத்தின் டிஜிட்டல் மாற்றத்தை  அது ஊக்குவிக்கிறது. 31.12.2022 நிலவரப்படி, 1.74 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் 2.39 லட்சம் வர்த்தகர்கள் இ-நாம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். ரூ. 2.42 லட்சம் கோடி மதிப்புள்ள 69 மில்லியன் மெட்ரிக் டன்கள் கொண்ட மொத்த வர்த்தகம் இ-நாம் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா விருதுகள் மத்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தால்  நிறுவப்பட்டது, இது டிஜிட்டல் ஆளுமைத் துறையில் பல்வேறு அரசு நிறுவனங்களால் புதுமையான டிஜிட்டல் தீர்வுகள்/ முன்மாதிரியான முயற்சிகளை ஊக்குவிக்கவும் கௌரவிக்கவும் தேசிய போர்டல் ஆஃப் இந்தியாவின் கீழ் உள்ளது. டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022, டிஜிட்டல் இந்தியா பார்வையை நிறைவேற்றுவதில் அரசாங்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் , ஸ்டார்ட்அப்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா விருதுகள் 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது.

 

*****

 

MS/PKV/DL


(Release ID: 1889408) Visitor Counter : 227