அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஸ்டெம் மற்றும் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு 10வது மகளிர் அறிவியல் காங்கிரசில் சிறப்பிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
07 JAN 2023 9:19AM by PIB Chennai
நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரசந்த் துகாடோஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் 2023, ஜனவரி 5 -6 தேதிகளில் நடைபெற்ற 108 வது இந்திய அறிவியல் காங்கிரசின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 வது மகளிர் அறிவியல் காங்கிரசில் ஸ்டெம், பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு சிறப்பிக்கப்பட்டது.
விவசாயியும் பாதுகாப்பியல் வல்லுநருமான பத்மஸ்ரீ திருமதி ரஹிபாய் சோமா போப்பெரே, பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பில் பெண்களின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைத்ததோடு, விவசாயிகள் சொந்தப் பயிர்களுக்குத் திரும்ப உதவும் தனது பிரச்சாரத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினார். தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட சேவா சதன் சன்சத் தலைவர் திருமதி காஞ்சன் கட்கரி ,பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை பற்றி பேசினார். புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகள் பலர் தங்களின் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை அனுபவங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு; உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வாய்ப்புகள்; நிலையான வளர்ச்சி இலக்குகள்; அறிவியல் தொடர்பு, டிஜிட்டல் மயமாக்கலின் பங்கு போன்றவை .பற்றி நிபுணர்கள் விவாதித்தனர்.
இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் பொதுத் தலைவர் டாக்டர் விஜயலக்ஷ்மி சக்சேனா, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் பல்வேறு முயற்சிகளைப் பாராட்டினார். மகளிர் அறிவியல் காங்கிரஸ் அமைப்பாளர் டாக்டர் கல்பனா பாண்டே, பழங்காலத்திலிருந்தே பெண்களிடையே நிலவும் அறிவியல் மனப்பாங்கு பற்றிப் பேசினார். 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 5000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
*****
MS/SMB/DL
(रिलीज़ आईडी: 1889352)
आगंतुक पटल : 237