மத்திய அமைச்சரவை
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
04 JAN 2023 4:13PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு ரூ.19,744 கோடியாக இருக்கும். இதில் சைட் நிகழ்ச்சிக்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும் இதர இயக்க அம்சங்களுக்கு ரூ.388 கோடியும் அடங்கும். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதுடன் அவற்றை செயல்படுத்தும்.
2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை மேம்படுத்தப்படும். மொத்த முதலீடுகள் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். 6 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக புதைபடிம எரிபொருள் இறக்குமதி குறையும். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் கிரீன் ஹவுஸ் வாயு உமிழ்வு குறைக்கப்படும்.
பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குதல், தொழிற்சாலை கார்பன் உமிழ்வை குறைத்தல், புதைபடிம எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உள்நாட்டு உற்பத்தி மேம்பாட்டு திறன்களை அதிகரித்தல் உட்பட ஏராளமான பயன்கள் இந்த இயக்கத்தின் மூலம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888545
***
AP/PKV/RR/KPG
(Release ID: 1888572)
Visitor Counter : 398
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam