நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

16.39% வளர்ச்சியோடு நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி, 2022 ஏப்ரல்-டிசம்பரில் 607.97 மில்லியன் டன்னாக அதிகரிப்பு

Posted On: 03 JAN 2023 10:18AM by PIB Chennai

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 607.97 மில்லியன் டன்னாக அதிகரித்தது. இது 2022-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தின் 522.34 மில்லியன் டன்னைவிட 16.39% அதிகம். இந்திய நிலக்கரி நிறுவனம், நிதி ஆண்டு 22 இல் உற்பத்தி செய்த 413.63 மில்லியன் டன் நிலக்கரியை விட, நிதியாண்டு 23 இல் 15.82% கூடுதலாக, 479.05 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது.

சொந்த நிலக்கரி தொகுப்புகளின் நிலக்கரி செயல்திறனை அதிகளவில் பயன்படுத்தி, கூடுதல் நிலக்கரியை சந்தையில் விற்பனை செய்வதற்கு நிலக்கரி அமைச்சகம் வழிவகை செய்துள்ளதன் காரணத்தால் சொந்த நிலக்கரி சுரங்கம் மற்றும் இதர நிறுவனங்களில் நிதி ஆண்டு 22 இல் உற்பத்தி செய்யப்பட்ட 62.19 மில்லியன் டன்னை விட 31.38% கூடுதலாக, 2022 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் 81.70 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.

ஒரு நிதியாண்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த நிலக்கரி/ பழுப்பு நிலக்கரியில் 50% வரை சொந்த சுரங்கத்தின் குத்தகைதாரர் விற்பனை செய்ய அனுமதிக்கும் நோக்கத்தில் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம் 2021-இன் கீழ் கனிம சலுகை விதிகள் 1960-ஐ நிலக்கரி அமைச்சகம் திருத்தியுள்ளது.

பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து முக்கிய சுரங்கங்களையும் ரயில் மூலம் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது. இதன் விளைவாக நாடு முழுவதும் பல்வேறு துறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மொத்த நிலக்கரியின் அளவு 2022 ஏப்ரல்- டிசம்பரில் 637.51 மில்லியன் டன்னாக பதிவானது. இது நிதியாண்டு 22 இன் இதே காலகட்டத்தில் பதிவான 594.22 மில்லியன் டன்னைவிட 7.28% கூடுதலாகும். 

***

 (Release ID: 1888176)

AP/RB/RR



(Release ID: 1888221) Visitor Counter : 166