ஆயுஷ்
நாடு முழுவதும் ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் ஸ்மார்ட் திட்டம்
Posted On:
02 JAN 2023 5:47PM by PIB Chennai
மத்திய ஆயுர்வேத அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ தேசிய ஆணையம், ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் மற்றும் மத்திய ஆயுஷ்அமைச்சகம் சார்பில் ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில், ஸ்மார்ட் திட்டத்தை உருவாக்கியுள்ளன. நாடு முழுவதும் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் வாயிலாக, சுகாதார ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.
இந்தத்திட்டத்தை இந்திய மருத்துவ தேசிய ஆணையத்தின் தலைவர் திரு வைத்திய ஜெயந்த் தியோபூஜாரி, ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சிலின் இயக்குனர் பேராசிரியர் ரவிநாராயண் ஆச்சாரியா ஆகியோர் புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர். ஆயுர்வேத வாரியத்தலைவர் பேராசிரியர் பிஎஸ் பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு வைத்திய ஜெயந்த் தியோபூஜாரி ஆயுர்வேதத் துறையில் ஆராய்ச்சியில் புதுப்பொலிவுப் பெற இந்த ஸ்மார்ட் திட்டம் பெரிதும் உதவும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888087
***
AP/ES/RS/KPG
(Release ID: 1888099)
Visitor Counter : 231