தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"பலவகை ஒளிபரப்புமுறை இயக்குவோர் (எம்எஸ்ஓக்கள்) பதிவு புதுப்பித்தல்" குறித்த பரிந்துரைகளை இந்தியத் தொலைத்தகவல் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது

Posted On: 29 DEC 2022 5:10PM by PIB Chennai

"பலவகை ஒளிபரப்புமுறை இயக்குவோர் (எம்எஸ்ஓக்கள்) பதிவு புதுப்பித்தல்" குறித்த பரிந்துரைகளை இந்தியத் தொலைத்தகவல் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்திய ஒலிபரப்புத் துறையின் டிஜிட்டல்மயமாக்கல் 2012 ஆம் ஆண்டு தொடங்கி மார்ச் 2017-ல் நிறைவடைந்தது. ஆன்டெனா விநியோக முறை (டிஏஎஸ்) அமலாக்கத்தின் போது, ஜூன் 2012-ல் பலவகை ஒளிபரப்புமுறை இயக்குவோருக்குப் புதிய பதிவுகளை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கியது. ஜூன் 2022-ல் இதன் புதுப்பித்தல்/நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். இருப்பினும், எம்எஸ்ஓ பதிவுகள்  புதுப்பித்தல் பற்றி கேபிள் டிவி  நெட்வொர்க் விதிகள், 1994   குறிப்பிடவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, எம்எஸ்ஓ புதுப்பித்தல் நடைமுறை தொடர்பான விஷயங்கள்  குறித்த பரிந்துரைகள் கோரி தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமிருந்து ஒரு குறிப்பை ஆணையம் பெற்றது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டன. பின்னர் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எம்எஸ்ஓ பதிவு  10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட வேண்டும்.

புதுப்பித்தலின் போது, செயலாக்கக் கட்டணத்தை ரூ. 1 லட்சமாக வைக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைக்கிறது. .

பதிவுகளை புதுப்பிக்க விண்ணப்பம் செய்வதற்கான சாளரம், உரிமம் காலாவதியாகும் தேதியிலிருந்து 7 மாதங்களுக்கு முன்னதாகவும், காலாவதியான தேதிக்கு 2 மாதங்களுக்குப் பின்பாகவும் திறக்கப்படமாட்டாது.

காலாவதியாகும் தேதியின் நினைவூட்டல், சம்பந்தப்பட்ட  எம்எஸ்ஓ களுக்கு காலாவதியாகும் தேதிக்கு குறைந்தது 7 மாதங்களுக்கு முன்னதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தானியங்கி  தகவல்தொடர்பு மூலம் அனுப்பப்பட வேண்டும்.

பரிந்துரைகளின் முழு விவரங்கள்  ட்ராய் அமைப்பின் இணையதளமான www.trai.gov.in ல் கிடைக்கும் .

ஏதேனும் தெளிவுபெற /தகவல்களுக்கு, ஆலோசகர் திரு  அனில் குமார் பரத்வாஜை  தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். எண்: +91-11-23237922.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பையும் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887332

*****

AP/SMB/KRS


(Release ID: 1887389) Visitor Counter : 170


Read this release in: English , Urdu , Marathi