வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது

Posted On: 29 DEC 2022 1:38PM by PIB Chennai

இந்தியா இவ்வருடம் இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தி உள்ளது. இந்தியா- ஐக்கிய அரபு நாடுகளுடனான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் மே 1  செயல்படுத்தப்பட்டப்பின் இன்று இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்புதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டு, எழுதப்பட்ட கோரிக்கைகள் நவம்பர் 29-30 அன்று பரிமாற்றிக் கொள்ளப்பட்டு, இன்று செயல்படுத்தப்பட்டது.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன, ஏனெனில் அந்நாடு பெரும்பாலும் எதையும் உற்பத்தி செய்யாது, ஆஸ்திரேலியா, மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு. இந்த ஒப்பந்தத்தால் நமக்கு மலிவான மூலப்பொருட்கள் கிடைக்கும், இந்திய நுகர்வோருக்குத்  தரமான பொருட்களை  மலிவான விலையில் வழங்கவும் நமக்கு உதவும். மறுபுறம், மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஆஸ்திரேலியாவிற்கு இந்தியா தனது 70% வரிகளை  குறைக்கும்.

 இந்த ஒப்பந்தம் ஐடி சேவைகளின் மேல் இருக்கும் இரட்டை வரிகளை ஒழிப்பதோடு, ஐடி துறையில் நமக்கு அதிக லாபத்தை கொடுக்கும். இரட்டை வரிகள் திருத்தப்பட்ட சட்டத்தால் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து ஐடி துறையில் இரட்டை வரி நீக்கப்பட்டது. பல கோடி டாலர்களை  வரப்போகும் வருடங்களில் சேமிப்பதால் பல வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும்.

ஆஸ்திரேலியா இதற்கு முன் ஒப்பந்தம் செய்யாத துறைகள், விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளாகும்.  இந்தியாவின் பலவீனமான துறைகளும் இவையே. ஆனால், தற்போது இந்த ஒப்பந்தத்தால் இத்துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மிகவும் பரிவுடன் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்தி, நமக்கு முழு ஒத்துழைப்பு அளித்த, ஆஸ்திரேலிய அரசை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டினார்.

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே முறையான வழிமுறைகளை ஏற்படுத்தி, வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் வழிவகுக்கிறது.

ஆஸ்திரேலியா சுமார் 135 துணைத் துறைகளில் சலுகைகள் வழங்கி, மிகவும் விருப்பமான நாடுகள் (MFN) பட்டியலில்  இந்தியாவிற்கு ஆர்வமுள்ள முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய 120 துணைத் துறைகளை வழங்கியுள்ளது.

மறுபுறம், இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சுமார் 103 துணைத் துறைகளில் சந்தைகள், வணிக சேவைகள், தகவல் தொடர்பு சேவைகள் போன்ற  11 பெரிய சேவைத் துறைகளில், 31 துணைத் துறைகளில் மிகவும் விருப்பமான நாடு அந்தஸ்தையும் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மருந்து தயாரிப்புகளுக்கான தனி இணைப்புக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இது காப்புரிமை பெற்ற, பொதுவான  மருந்துகளுக்கு விரைவான அனுமதியை வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தினால், இந்தியாவில் கூடுதலாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய யோகா ஆசிரியர்கள் மற்றும் சமையல் கலைஞர்களுக்கு  வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் மூலம் பயனடைவார்கள். இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தினால் 1 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி விசா மூலம் பயனடைவார்கள். ஆஸ்திரேலியா இந்தியாவின் முக்கியமான  நட்பு நாடு.  ஆஸ்திரேலியா நான்கு நாடுகளான குவாட், முத்தரப்பு சப்ளை செயின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதார மன்றம் ஆகியவற்றில் பங்களித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887259

********

AP/RKM/KRS



(Release ID: 1887372) Visitor Counter : 232