ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் வடிமைப்பு, இயந்திர உற்பத்தி மற்றும் மேம்பாடு, கருவிகள், உபகரணங்கள் மற்றும் சோதனை கருவிகளுக்கு நிதி அளிப்பதற்காக ஆராய்ச்சி பரிந்துரைகளை ஜவுளி அமைச்சகம் வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 28 DEC 2022 2:59PM by PIB Chennai

தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா முக்கிய இடம்பெறும் வகையில், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ்  வடிமைப்பு, இயந்திர உற்பத்தி மற்றும் மேம்பாடு, கருவிகள், உபகரணங்கள் மற்றும் சோதனை கருவிகளுக்கு நிதி அளிப்பதற்காக ஆராய்ச்சி பரிந்துரைகளை ஜவுளி அமைச்சகம் வரவேற்கிறது.

இதுவரை உயர்தொழில்நுட்ப இயந்திரம், உபகரணங்கள், சிறப்பு கருவிகள் உள்ளிட்டவை பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஜவுளி தொழில் துறையின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், நம்நாட்டை தற்சார்புடையதாக்கும் வகையிலும், வடிவமைப்பு, பொறியியல், முன்மாதிரி ஆகியவற்றில் உள்ளூர் திறனை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதையடுத்து, தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கருத்தின் அடிப்படையில், தொழிநுட்ப ஜவுளித்துறைக்கான இயந்திரம், உபகரணங்கள், கருவிகள் மற்றும் சோதனை கருவிகளை  உள்நாட்டில் தயாரிக்கவேண்டும் என்று கருதுகிறது.

இதுகுறித்து விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் www.nttm.texmin.gov.in  என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

**************

SM/IR/RS/GK


(रिलीज़ आईडी: 1887057) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Telugu