சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் முக்கிய முன்னெடுப்புகள் மற்றும் சாதனைகள்

Posted On: 26 DEC 2022 3:31PM by PIB Chennai

2019-ம் ஆண்டு அரசிலமைப்பு சட்டத்தின் 103-வது திருத்தத்தின் படி பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அரசு வேலை மற்றும்  அரசு கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசிலமைப்பு சட்டம் 103 வது திட்டத்தை எதிர்த்து பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அரசிலமைப்பு சட்ட அமர்வின், பெரும்பான்மை கொண்ட நீதிபதிகளால்  07.11.2022 அன்று அனைத்து ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அரசிலமைப்பு 103வது  சட்டத்திருத்தம்  2019 செல்லுபடியாகும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தால் போதை மருந்தில்லா இந்தியா இயக்கம் ஆகஸ்ட் 15 2020 அன்று தொடங்கப்பட்டது.  இது போதை மருந்து தடுப்பு அமைப்பால் பெறப்பட்ட அறிக்கையின்படி 372 மாவட்டங்களில் இந்த இயக்கம் அமல்படுத்தப்பட்டது. உயர்க்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் போதை மருந்தின் தீமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது. அத்துடன், இப்பழக்கத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து கலந்தாய்வு செய்தல், மருத்துவமனைகளில் சிகிச்சை வசதிகள்,  மறுவாழ்வு மையங்கள், இதற்கான சேவைகளில் ஈடுபடுவோருக்கு திறன்மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.

தேசிய போதைப்பொருள்இல்லா உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் 99,595 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த  ஒரு கோடியே 67 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்றால் பெற்றோர் அல்லது காப்பாளர்  அல்லது தத்தெடுத்த பெற்றோரை இழந்த  குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிப்பை நிறைவு செய்ய உதவும் நோக்கில் பிரதமரின் குழந்தைகள் நலநிதியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் 2022-23ம் நிதியாண்டில்  இதுவரை 789.40 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதனால், 3947 மாணவர்கள் பயனடைந்தனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய  கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அக்டோபர் 2022-ல் 0.34 கோடி ரூபாய் 33 மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது. நவம்பர் 2022-ல் 11.79 கோடி ரூபாய் 1980 மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது.

கழிவுநீர் சாக்கடையில் விழுந்து உயிரிழந்த 144 பேரின் குடும்பத்தினருக்கு  நீண்டகாலமாக வழங்கபடாமல் இருந்த 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

1993 முதல் -98ம் ஆண்டு வரை 8பேருக்கும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை ஒருவருக்கும், 2005முதல் 09 ம் ஆண்டு வரை  8பேருக்கும், 2010 முதல் 2015ம் ஆண்டு வரை 31 பேருக்கும், 2016 முதல் 22ம் ஆண்டு வரை 96 பேருக்கும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886686 

**************

SM/IR/RS/KRS



(Release ID: 1886704) Visitor Counter : 231