அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அகச்சிவப்புக் கதிர் ஈர்ப்புத் தொழில்நுட்பங்களுக்கான புதிய செயற்கை நானோ கட்டமைப்புகள் பாதுகாப்பு, வரைபட செயலாக்கம் மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் பயனுள்ளதாக அமையும்

Posted On: 24 DEC 2022 11:35AM by PIB Chennai

கேலியம் நைட்ரைடு (ஜிஏஎன் -GaN) நானோ கட்டமைப்புகளுடன், அகச்சிவப்பு (IR) ஒளியைக் கட்டுப்படுத்தி ஈர்ப்பதற்கான ஒரு புதிய முறையானது, பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், ஆற்றல் தொழில்நுட்பங்கள், வரைபட செயலாக்கம் (இமேஜிங்), உணர்திறன் மற்றும் பலவற்றில் பயனுள்ளதாக அமையும். மிகவும் திறன்மிக்க அகச்சிவப்பு ஈர்ப்பு அமைப்புகள், உமிழ்ப்பான்கள் மற்றும் மாடுலேட்டர்களை உருவாக்க உதவும்.

நீல ஒளி உமிழ்வுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஜிஏஎன், மிகவும் மேம்பட்ட குறைக்கடத்திகளில் ஒன்றாகும். ஜிஏஎன்-னின் புலப்படும் மற்றும் புற ஊதா ஒளி பயன்பாடுகள் ஏற்கனவே உணரப்பட்டிருந்தாலும், எல்இடி-கள் மற்றும் லேசர் டயோடுகள் வணிக ரீதியாக கிடைக்கும் நிலையில் அகச்சிவப்பு ஒளி உருவாக்குதலில் ஜிஏஎன் பயன்பாடு அல்லது ஜிஏஎன் அடிப்படையிலான அகச்சிவப்பு ஆப்டிகல் கூறுகளை உருவாக்குதல் குறைவாகவே உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி நிறுவனமான பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) ஆராய்ச்சியாளர்கள், ஜிஏஎன் நானோ கட்டமைப்புகளுடன் அகச்சிவப்பு ஒளி உமிழ்வு மற்றும் ஈர்த்தலை முதன்முறையாக காண்பித்துள்ளனர். ஜிஏஎன்-னிலிருந்து நீல ஒளி உமிழ்வு அறியப்பட்டிருந்தாலும், அது எல்இடி களில் பயன்படுத்தப்படுகிறது. அகச்சிவப்பு ஒளி-பொருள் தொடர்புகள் ஜிஏஎன்-னில் நிரூபிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த செயல்விளக்கத்திற்காக, அவர்கள் அகச்சிவப்பு நிறமாலை வரம்பில் ஒளி-பொருள் தொடர்புகளுக்கு வழிவகுக்கும் ஜிஏஎன் நானோ கட்டமைப்புகளில், மேற்பரப்பு துருவமுனை தூண்டுதல்கள் எனப்படும் அறிவியல் நிகழ்வைப் பயன்படுத்தியுள்ளனர்.

“கடந்த 25 ஆண்டுகளில், ஜிஏஎன்-னுடன் நீல நிற எல்இ.டி, உலகத்தை கணிசமாக மாற்றியுள்ளது. ஜிஏஎன்-னிலிருந்து நீல ஒளி உமிழ்வு நன்கு புரிந்து கொள்ளப்பட்டாலும், அகச்சிவப்பு ஒளியியலுக்கு ஜிஏஎன்-னைப் பயன்படுத்துவது உறுதியாக நிறுவப்படவில்லை. அகச்சிவப்பு நானோபோடோனிக் பயன்பாடுகளில் ஜிஏஎன்-ஐப் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய முறையை எங்கள் பணி நிரூபித்துள்ளது. முக்கியமாக, நாங்கள் நிரூபித்த அகச்சிவப்பு மேற்பரப்பு துருவமுனைப்பு தூண்டுதல்களைப் பல குறைக்கடத்திகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்." என 'நானோ லெட்டர்ஸ்'  (Nano Letters) என்ற புகழ்பெற்ற இதழில் இந்த ஆய்வு தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தொழில்நுட்பத்தின் செயல்முறை விளக்கப்பட்டுள்ளது.

"இந்தப் பணி எரிசக்தி, ஆற்றல், பாதுகாப்பு, வரைபட செயலாக்கம் (இமேஜிங்) மற்றும் பிற பயன்பாடுகளுக்கான அகச்சிவப்பு (ஐஆர்) ஆதாரங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான தேவையை நிவர்த்தி செய்வதில் பெரிதும் பயனளிக்கும்" என்று ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிவாஸ் சாஹா கூறினார்.

**************

SM/PLM/DL


(Release ID: 1886391) Visitor Counter : 241


Read this release in: English , Urdu , Hindi