மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் தங்களுடைய ஆவணங்களை புதுப்பிக்குமாறு பொது மக்களுக்கு ஆதார் ஆணையம் வலியுறுத்தல்

Posted On: 24 DEC 2022 4:48PM by PIB Chennai

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு  புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மைஆதார் போர்ட்டல் மூலம் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை (அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று) பதிவேற்றுவதன் மூலம் பொது மக்கள் தங்கள் ஆதார்களைப் புதுப்பிக்கலாம்.

கடந்த தசாப்தத்தில், இந்தியாவில் வசிப்பவர்களின் அடையாளத்திற்கான உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சான்றாக ஆதார் எண் விளங்குகிறது. மத்திய அரசு நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வங்கிகள், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பலவேறு நிதி வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை எந்தத்தடையும் இன்றி  அங்கீகரித்து, அனைத்து வகையான சேவைகளையும் வழங்க ஆதாரைப் பயன்படுத்துகின்றன.

தங்களுடைய ஆதார்களை தற்போதைய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுடன் புதுப்பித்து வைத்திருப்பது பொது மக்களுக்கு நன்மையை அளிக்கும். மேலும் ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சீராக வாழ்வதற்கும், சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவுகிறது.

நவம்பர் 09, 2022 அன்று அறிவிக்கப்பட்ட ஆதார் (பதிவு மற்றும் புதுப்பிப்பு) (பத்தாவது திருத்தம்) விதிமுறைகள் 2022-ன் கீழ், பொது மக்கள் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையம்பொது மக்கள் தங்களின் முக்கிய தகவல்களைத் துல்லியமாக பெறுவதற்கு அவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணைப் புதுப்பிக்கத் தேவையான ஆவணங்களைப் புதுப்பிக்குமாறு வலியுறுத்துகிறது.

**************

SM/GS/DL



(Release ID: 1886347) Visitor Counter : 679