பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

நல்லாட்சி தினத்தைக் குறிக்கும் வகையில் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் முக்கியமான முன்முயற்சிகள், சாதனைகள் குறித்த இ-புத்தகங்கள், புதுப்பிக்கப்பட்ட ப்ரோபிட்டி போர்ட்டல், இ-எச்ஆர்எம்எஸ் 2.0 போர்ட்டல் ஆகியவற்றை மத்திய அமைச்சர் டாக்டர் கஜேந்திர சிங் நாளை வெளியிடுகிறார்

Posted On: 24 DEC 2022 3:14PM by PIB Chennai

நல்லாட்சி தினத்தைக் குறிக்கும் வகையில் பணியாளர் நலன்பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் முக்கியமான முன்முயற்சிகள்சாதனைகள் குறித்த இ-புத்தகங்கள்புதுப்பிக்கப்பட்ட ப்ரோபிட்டி போர்ட்டல்இ-எச்ஆர்எம்எஸ் 2.0 போர்ட்டல் ஆகியவற்றை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); ; பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர்  டாக்டர் கஜேந்திர சிங் நாளை புதுதில்லியில் வெளியிடுவார்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது முன்னாள் பிரதமர், பாரத ரத்னா, அடல் பிகாரி வாஜ்பாயின்  பிறந்த நாளை நினைவுகூர்வதாகவும் உள்ள நல்லாட்சி வாரம் 2022 டிசம்பர் 19 அன்று "கிராமங்களுக்கு நிர்வாகம்"  என்ற பிரச்சாரத்துடன் நாடுமுழுவதும் தொடங்கப்பட்டது.  டிசம்பர் 25 வரை நடைபெறும் ஒரு வார கால நிகழ்ச்சிகளின் நிறைவு குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டிருக்கும் செய்தியில், "ஒட்டுமொத்த அரசு அணுகுமுறை"  என்பது, "எனது அரசு சாமானிய மக்களுக்காகப் பாடுபடுகிறது.  எங்களின் முன்னுரிமை தேசத்தின் ஏழைகள். துடிப்புமிக்க, தடையற்ற  ஆட்சியின் மூலம் நல்ல நிர்வாகத்தை அளிக்க நாங்கள் விரும்புகிறோம்"   என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் நீட்சியாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே உள்ள இ-எச்ஆர்எம்எஸ் இணையப் பக்கத்தில் ஊழியர்கள்  குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே பெற்று வந்தனர். மேலும் மற்ற மனிதவள செயலிகளோடு   இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக டிஜிட்டல் சேவை மூலம் முழுமையான பயன்களைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது.  அரசின் முன் முயற்சிகள் மற்றும் மனிதவள செயல்களுடன் தடையற்ற தொடர்பையும் கொள்ள இயலவில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட இ-எச்ஆர்எம்எஸ் 2.0 இணையப் பக்கத்தை டாக்டர் ஜிதேந்திரசிங் தொடங்கி வைப்பார்.

இடமாற்றங்கள் (சுழற்சிமுறை மற்றும் பரஸ்பரம்) அயல்பணி, வெளிநாட்டுப்  பயணம், பயிற்சிகள், கண்காணிப்பு நிலைமை, அயல்பணி வாய்ப்புகள்,   பணிப்புத்தகம் மற்றும் விடுமுறைசுற்றுப்பயணம், செலவினத்தைத்  திரும்பப்பெறுதல் போன்ற மனிதவள அடிப்படை சேவைகளும் டிஜிட்டல்  முறையில் ஊழியர்களுக்குக்  கிடைக்க வசதியாக இந்த இணையப்பக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  புதுப்பிக்கப்பட்ட  எச்ஆர்எம்எஸ் 2.0 இணையப்பக்கம் பல ஆயிரம் மனித உழைப்பு நேரத்தையும் அச்சடிக்கும் ஆயிரக்கணக்கான டன் காகிதத்தையும் சேமிக்க உதவும். பணியாளர்களின் திருப்தியை அதிகரிக்கவும், பணி செயல்பாடுகள் நடைமுறைகளை எளிதாக்கவும், நிர்வாக செயல்பாட்டில் உற்பத்தித்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை விரிவுபடுத்தவும் இது பயன்படும்.

மத்திய அரசால் தொடங்கப்பட்ட கர்மயோகி இயக்கத்தின் கீழ்தொழில்முறை சார்ந்த, நன்கு பயிற்சி பெற்ற, எதிர்காலத்திற்குத் தயாரான இந்தியக் குடிமைப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் கர்மயோகி பாரத் (எஸ்பிவி) மூலம் ஐகாட் கர்மயோகி இணையப்  பக்கத்தின் செல்பேசி செயலியையும் அமைச்சர் தொடங்கி வைப்பார்.

**************

SM/SMB/DL(Release ID: 1886321) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi