ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
2022-ஆம் ஆண்டு உரத்துறை செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
Posted On:
23 DEC 2022 4:16PM by PIB Chennai
இந்த ஆண்டு யூரியா மானியத்திட்டம், ஊட்டச்சத்து தொடர்பான மானியத் திட்டம் மற்றும் நேரடி மானிய பரிமாற்றத்திட்டம் போன்ற உரத்துறை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே தேசம், ஒரே உரம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவைப்படும் சரியான நேரத்திற்கு உரங்களை வழங்குதல் மற்றும் சந்தையில் எந்த வகையான உரங்களை வாங்குதல் என்பதில் விவசாயிகளுக்கு இருக்கும் குழப்பத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது பல்வேறு நிலைகளில் உள்ள உர விநியோக சில்லறை விற்பனை நிலையங்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் சம்ரிதி கேந்திரா திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் சுமார் 600 சில்லறை விற்பனை நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயம் தொடர்பான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. பிரதமரின் உர மானியத் திட்டத்தின் கீழ் ஒரே தேசம், ஒரே உரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு உரங்கள், விரைவாக கிடைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு இடையே உரக்கையிருப்புகளை தெரிந்துகொள்வதற்காக வாரந்திர காணொலிக் கூட்டத்தை உரத்துறை நடத்துகிறது. உரப்பற்றாக்குறை ஏற்பட்டால், உரம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இந்திய ரயில்வேத்துறை ஆகியவைகள் இணைந்து தட்டுப்பாட்டை நீக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசுகளும், கையிருப்பு உரநிலை குறித்தத் தகவல்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக நாள் தோறும், மாநிலங்கள், உரஉற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ரயில்வேத்துறை ஆகியவற்றுடன் தொடர் கலந்தாய்வு நடைபெறும்.
சமீபத்தில் மத்திய அரசு நானோ யூரியா உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளதையடுத்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை யூரியா பயன்படுத்தப்படும் போது பயிர் மகசூலில் 8 சதவீதம் உயர்வு கண்டுள்ளது என்பதை இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் கண்டறிந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நானோ யூரியா உரம் வர்த்தக உற்பத்தி தொடங்கப்பட்டது. வரும் 2025-ஆம் ஆண்டில் 8 யூரியா உற்பத்தி நிலையத்திலிருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் 44 கோடி நானோ யூரியா பாட்டில்கள் தயார் செய்யப்படும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி வரையில், சுமார் 5.12 கோடி பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் விவசாயிகளுக்கு 4.07 கோடி பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886054
**************
SG/GS/KPG/KRS
(Release ID: 1886155)