மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
Posted On:
23 DEC 2022 1:55PM by PIB Chennai
இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவு சார்ந்த பொருளாதாரமாகவும் மாற்றும் நோக்குடன் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு முக்கிய பயன்பாடாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தேவைக்கேற்ப நிர்வாகம் மற்றும் சேவைகள், குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகிய மூன்று முக்கிய தொலைநோக்குப் பகுதிகளை மையமாகக் கொண்டது இந்தத் திட்டம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதையும், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதையும், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும், இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப திறன்களை உருவாக்குவதையும் உறுதி செய்வதே ஒட்டுமொத்த இலக்காகும்.
டிஜிட்டல் இந்தியா அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான தூரத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. வெளிப்படையான மற்றும் ஊழலற்ற முறையில் பயனாளிகளுக்கு நேரடியாக கணிசமான சேவைகளை வழங்கவும் இது உதவியுள்ளது. இந்த செயல்பாட்டில், அதன் குடிமக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா என்பது பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல திட்டங்களை உள்ளடக்கிய ஒரு குடை திட்டமாகும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய பிபிஓ ஊக்குவிப்பு திட்டம் (ஐபிபிஎஸ்) மற்றும் வடகிழக்கு பிபிஓ ஊக்குவிப்பு திட்டம் (என்இபிபிஎஸ்) ஆகியவற்றின் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு தொடங்கியுள்ளது. மேற்றகூறிய இரு திட்டங்களின் கீழ், 246 பிபிஓ/ஐடிஇஎஸ் அலகுகள் 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. அவை 51,584 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
**************
SG/PKV/GK
(Release ID: 1886068)