பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 23 DEC 2022 9:06AM by PIB Chennai

கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் சர்வே மேற்கொள்ளும் ஸ்வமிதா திட்டம்,  ஒவ்வொரு கிராமப்புற நில உரிமையாளருக்கும் “உரிமைகள் பதிவேடு” வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் நோக்கத்துடன் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2020  ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பிரதமரால் தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக இத்திட்டம் முன்னோடியாக  (ஏப்ரல் 2020 - மார்ச் 2021),  ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது  கட்டமாக  2025க்குள் மீதமுள்ள கிராமங்களின் முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

2022 ஆம் ஆண்டில் ஸ்வமிதா திட்டத்தின் கீழ் சாதனைகள்

டிசம்பர் 2022 நிலவரப்படி, 2,03,118 கிராமங்களில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, தில்லி, ஹரியானா, லட்சத்தீவுகள், புதுச்சேரி, உத்தரகண்ட், கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ட்ரோன் மூலம் செயல்படுத்தப்பட்டது.

ஹரியானா மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சொத்து அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அட்டைகள் தயாரித்தல் மற்றும் விநியோகம் விரைவில் முடிக்கப்படும்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் , மின்-ஆளுமையை வலுப்படுத்துவதற்காக, இ கிராம் சுயராஜ் எளிமைப்படுத்தப்பட்ட வேலை அடிப்படையிலான கணக்கியல் விண்ணப்பம், ஏப்ரல் 24, 2020 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தொடங்கப்பட்டது. இது செயல்பாடுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் விவரங்களை ஒருங்கிணைத்தல்:

வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளிக்கவும், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்,  பல்வேறு மத்திய  அமைச்சகங்கள்/ துறைகளின் பயனாளிகளின் விவரங்களை இ-கிராம்ஸ்வராஜ் விண்ணப்பத்துடன் ஒருங்கிணைத்து வருகிறது.

 நடப்பு ஆண்டில் பதினைந்து நிதி ஆணையத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக 2.05 லட்சம் சொத்துகளின் புகைப்படங்கள் கிராம பஞ்சாயத்துகளால் பதிவேற்றப்பட்டுள்ளன.

குடிமக்கள் சாசனம்

சேவைகளின் தரநிலை, தகவல், தேர்வு மற்றும் ஆலோசனை, பாகுபாடு இல்லாமை மற்றும் அணுகல், குறை நிவர்த்தி, மரியாதை மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகியவற்றில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின்  குடிமக்களுக்கு அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்தும் வகையில், அமைச்சகம் தளத்தை வழங்கியுள்ளது

பஞ்சாயத்து ராஜ்வமைப்புகளின் திறன் மேம்பாடு

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின்  திறன் உருவாக்கம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். அமைச்சகம் மற்றும் பல துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக்கான  தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஆதரவை  வழங்கி வருகிறது. திறன் மேம்பாட்டின் கீழ்,  அதிகாரப் பகிர்வை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் நிர்வாகத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், கிராமப்புற இந்தியாவை வலுப்படுத்துவதற்கும் இந்த  ஆதரவு வழங்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம ஸ்வராஜ் இயக்கம்  நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும்  நீட்டிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட இந்த இயக்கத்தின்  கீழ்,  12 மாநிலங்கள் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம் மற்றும் உத்தரகண்ட்) மற்றும் பிற செயல்படுத்தும் முகமைகளுக்கு ரூ.435.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

 

**************

PKV/GK



(Release ID: 1885932) Visitor Counter : 221


Read this release in: English , Marathi , Hindi , Malayalam