உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இறுதியாக பாகங்கள் பொருத்தும் இடம் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையாக செப்பனிடுதல் வசதிகளை அமைப்பதற்காக டிஏஎஸ்எல் நிறுவனத்திற்கு வதோதரா விமான நிலையத்தில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 22 DEC 2022 2:09PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பிராந்திய போக்குவரத்து விமானம் உட்பட விமானங்கள் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களின் உற்பத்தியை அரசு  ஊக்குவித்து, வசதிசெய்து தருகிறது.

இதன் ஒரு பகுதியாகவும் அரசின் “தற்சார்பு இந்தியா” திட்டத்தை ஊக்கப்படுத்தவும் ஏர்பஸ் டிபன்ஸ் மற்றும் ஸ்பேசுடன் இணைந்து டாட்டா அட்வான்ஸ்ட் சிஸ்டம் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் சி-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தைத் தயாரிக்க உள்ளது. இதற்கு உதவும் வகையில்  இறுதியாக பாகங்கள் பொருத்தும் இடம் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையாக செப்பனிடுதல் வசதிகளை அமைப்பதற்காக டிஏஎஸ்எல் நிறுவனத்திற்கு  வதோதரா விமான நிலையத்தில் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம்  ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அடிக்கல் நாட்டும் விழா 30.10.2022 நடைபெற்றது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு) இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***


(Release ID: 1885796)
Read this release in: English , Urdu , Telugu