சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு தொடர் நடவடிக்கை
प्रविष्टि तिथि:
22 DEC 2022 1:07PM by PIB Chennai
2022-23ம் ஆண்டு நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாராமரிப்புக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.2, 480 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு அமைப்பின் கீழ் செலவிடப்பட்டு வருகிறது. இதைத்தவிர, இந்த நிதியாண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் தரமான மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலைப்பணிகள் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக ரூ.768 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 44.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
**************
AP/ES/RS/GK
(रिलीज़ आईडी: 1885725)
आगंतुक पटल : 143