உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காணாமல் போன குழந்தைகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டனர்

Posted On: 21 DEC 2022 5:49PM by PIB Chennai

தேசிய குற்ற ஆவணக் காப்பக அமைப்பு தனது “கிரைம் இன் இந்தியா” என்ற வெளியீட்டில் குற்றத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இதில் 2021-ஆம் ஆண்டு வரையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை காணாமல் போன குழந்தைகள் மற்றும் கண்டறியப்பட்டவர்கள் குறித்த விவரங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2021-ஆம் ஆண்டில் 77,535 குழந்தைகள் காணாமல் போனதில் 76,827 குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.

தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டில் 4,519 குழந்தைகள் காணாமல் போனதில் 4,263 குழந்தைகள், கண்டறியப்பட்டனர். 2020-ஆம் ஆண்டில் 4,591 குழந்தைகள் காணாமல் போனதில், 4373 குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.  2021-ஆம் ஆண்டில் 6,399 குழந்தைகள் காணாமல் போனதில், 6,301 குழந்தைகள் கண்டறியப்பட்டனர்

இத்தகவலை மாநிலங்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885483

**************

AP/IR/KPG/GK


(Release ID: 1885534) Visitor Counter : 160


Read this release in: English , Urdu