ரெயில்வே அமைச்சகம்
ரயில் முன்பதிவு பயணச் சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது
Posted On:
21 DEC 2022 4:28PM by PIB Chennai
ரயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மொபைல் மற்றும் இணையதளம் வாயிலாக உலக அளவில் ரயில் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. ரயில் முன்பதிவு பயணச் சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.
இத்தகவலை மக்களவையில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885426
**************
AP/IR/RJ/KRS
(Release ID: 1885488)