ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது:மத்திய அரசு
Posted On:
21 DEC 2022 4:05PM by PIB Chennai
மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஸ் மக்களையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை அதிகரிக்க மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் திட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
-----
AP/PKV/KPG/GK
(Release ID: 1885487)