பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2018-ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை குறிப்பிடத்தக்க அளவில் 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 DEC 2022 1:40PM by PIB Chennai
2018-ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை குறிப்பிடத்தக்க அளவில் 4,798 மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இது குறித்து மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த டாக்டர் ஜிதேந்திர சிங் தேவையான பணிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றுதிறனாளிகளுக்கு உதவுவதற்கான நபர்களின் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுகளில் அவர்களுக்கு மணிக்கு 20 நிமிடம் கூடுதல் நேரம் அளிக்கப்படும் என்று தேர்வு அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1885334
**************
AP/IR/KPG/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1885400)
வருகையாளர் எண்ணிக்கை : 154