மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு மீன்வளம், மீன்வளர்ப்பை மேம்படுத்த மீன்வளத்துறை எடுத்தநடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 20 DEC 2022 4:46PM by PIB Chennai

பிரதமரின் மத்சய சம்பாத யோஜனாவின் கீழ் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை  உள்நாட்டு மீன்வளத்தையும், மீன் வளர்ப்பையும் தீவிரப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மீன் வளர்ப்பில் பல்வேறு வகையான மீன்வகைகளை  உருவாக்கி வளர்ப்பதை  இது நோக்கமாகக் கொண்டது. 2021-22-ஆம் ஆண்டின் இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியில் 74.59 சதவீதத்தை உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு அளித்துள்ளது. மீன் வளர்ப்பு விவசாயிகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நவீனதொழில்நுட்பங்களை உருவாக்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தவும் மீன்வளத்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  நீர்த்தேக்கங்களில் கூண்டுகளை அமைத்தல், ஈர நிலங்களில் பெட்டிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் மீன்வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்னீர் இறால் வளர்ப்பு, உப்புநீர் மீன்வளர்ப்பு ஆகிய நடைமுறைகள் மூலமாகவும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.

மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபலா எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

**************

(Release ID: 1885122)

AP/PKV/KPG/KRS


(रिलीज़ आईडी: 1885196) आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu