புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எரிசக்தித்துறையில் மகளிர் பங்கேற்பை ஊக்குவிக்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

Posted On: 20 DEC 2022 3:39PM by PIB Chennai

சூரியசக்தி, காற்றாலை எரிசக்தி, சிறிய புனல் மின்திட்டங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் திறன் மேம்பாட்டுக்கான  திட்டங்களுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகம் ஆதரவளித்து வருகிறது.  2015-16-ஆம் நிதியாண்டு முதல் சூரியசக்தி திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த நவம்பர் மாதம் வரை 2,251 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 836 பேருக்கு வேலை கிட்டியுள்ளது.

காற்றாலை மற்றும் புனல் மின் திட்டங்களில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அண்மையில்,  தொடங்கப்பட்டன. இவற்றுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

கிராமப்பகுதியில் உள்ள போதிய படிப்பறிவு இல்லாத பெண்களுக்கான ஆறு மாத பயிற்சி திட்டத்திற்கு அமைச்சகம் ஆதரவளித்து வருகிறது. இவர்கள், சூரிய விளக்குகளை ஏற்றி, இயக்கி, பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.

மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

                                      ************** 
 

(Release ID: 1885075)

AP/PKV/KPG/KRS


(Release ID: 1885158)
Read this release in: English , Urdu , Telugu