உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உணவுத் பதப்படுத்தும் துறையின் பங்களிப்பு
प्रविष्टि तिथि:
20 DEC 2022 2:00PM by PIB Chennai
கடந்த 2016-17-ம் நிதியாண்டில் ரூ.1.79 லட்சம் கோடியாக இருந்த உணவுப்பதப்படுத்தும் துறையின் மொத்த கூட்டுமதிப்பு 2020-21-ம் நிதியாண்டில் ரூ.2.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த கூட்டு மதிப்பு 2018-19 நிதியாண்டில் ரூ.2.36 லட்சம் கோடியாகவும், 2019-20-ம் நிதியாண்டில் ரூ.2.26 லட்சம் கோடியாக இருந்தது.
உற்பத்தித்துறை வேலை வாய்ப்பில் உணவுப் பாதுகாப்புத்துறை 12 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளது. உணவுப்பதப்படுத்தும் துறை அமல்படுத்தியுள்ள பிரதமரின் உழவர் மேம்பாட்டுத்திட்டம், சிறிய உணவுப்பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உணவுப் பதப்படுத்தும் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
**************
AP/ES/AG/KRS
(रिलीज़ आईडी: 1885110)
आगंतुक पटल : 208