குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் புள்ளி விவரம்
Posted On:
19 DEC 2022 1:18PM by PIB Chennai
2021-22ஆம் நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உதயம் இணையதள முன்பதிவு மூலம் 1,31,18,896 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். முன்னதாக 2020-221-ஆம் நிதியாண்டில் 1,12,97,690 பேர் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
உதயம் இணையதளம் மூலம் 2021-22-ஆம் நிதியாண்டில் 20,78,882 நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாகப் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில், 18,41,253-ஆக இருந்தது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884735
**************
(Release ID:1884735)
AP/ES/KPG/KRS
(Release ID: 1884880)