தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
ஜம்மு காஷ்மீரில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்
प्रविष्टि तिथि:
19 DEC 2022 1:25PM by PIB Chennai
நடப்பு ஆண்டு ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பற்றோர் சதவீதம் 2019-20ம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும், 2020-21-ம் ஆண்டில் 5.9 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பற்றோர் சதவீதம் குறைந்து வருவதை காட்டுகிறது.
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொவிட்-19 பாதிப்பில் இருந்து தொழில் நிறுவனங்கள் மீள் வதற்காக சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் 27 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.
சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 28ந் தேதி வரை 19.34 ஆயிரம் பயனாளிகளுக்கு 35.39 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884740
**************
AP/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 1884804)
आगंतुक पटल : 218