தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்கள்

Posted On: 19 DEC 2022 1:23PM by PIB Chennai

15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20-ம் ஆண்டு 50.9 சதவீதமாக இருந்த நிலையில் அது 2020-21-ம் ஆண்டில் 52.6 சதவீதமாக இருந்தது.  ஆடை உற்பத்தி நிறுவனங்களில் கடந்த 2019-20-ம் ஆண்டில் ஆண்கள் 1.44 சதவீதம், பெண்கள் 3.72 சதவீதம் என  சராசரியாக 2.08 சதவீதம் பேர் பணிபுரிந்தனர். 2020-21-ம் ஆண்டில் ஆண்கள் 1.44 சதவீதம், பெண்கள் 4 சதவீதம் என சராசரியாக 2.20 சதவீதம் பேர் பணிபுரிந்தனர். இதன் மூலம் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் 2019-20-ம் ஆண்டைவிட 2020-21-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

இத்தகவலை மக்களவையில்  மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884739 

**************

AP/IR/AG/KRS


(Release ID: 1884801)
Read this release in: English , Urdu , Telugu