நிதி அமைச்சகம்
2022-23 ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 25.90% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Posted On:
18 DEC 2022 5:45PM by PIB Chennai
2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் புள்ளிவிவரத்தில், 17.12.2022 நிலவரப்படி நிகர வசூல் ரூ. 11,35,754 கோடி. இது முந்தைய ஆண்டின் ரூ. 9,47,959 கோடி நிகர வசூலை விட 19.81% அதிகமாகும்.
நிகர நேரடி வரி வசூல் ரூ. 11,35,754 கோடியில் (17.12.2022 நிலவரப்படி), கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 6,06,679 கோடி (திரும்பப் பெறுவதற்கான நிகரம்), தனிப்பட்ட வருமான வரி, பத்திர பரிவர்த்தனை வரி உட்பட ரூ. 5,26,477 கோடி ஆகியவை அடங்கும்.
2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 13,63,649 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 10,83,150 கோடி என்னும் முந்தைய நிதியாண்டின் வசூலை விட 25.90% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. .
மொத்த வசூல் ரூ. 13,63,649 கோடியில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 7,25,036 கோடி. தனிப்பட்ட வருமான வரி , பத்திர பரிவர்த்தனை வரி உட்பட ரூ. 6,35,920 கோடி.
**************
SM/PKV/DL
(Release ID: 1884609)
Visitor Counter : 255