பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களை சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 16 DEC 2022 3:31PM by PIB Chennai

உள்நாட்டிலேயே  உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் சில:

  • ஏற்றுமதி பொருட்கள் 6 வகைகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சகத்தால் அது தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • ஏற்றுமதிக்கான அங்கீகாரம் வழங்க மின்னணு முறையிலான நடைமுறைகளை  www.defenceexim.gov.in  என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • திறந்த பொது ஏற்றுமதி அனுமதிக்காக பாதுகாப்பு அமைச்சகம் 3 பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
  •  இந்திய பாதுகாப்பு தொழில் துறை தொடர்பாக இரண்டு கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • பாதுகாப்புத் துறை  உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க நட்பு நாடுகளுடன் இணைந்து இணையதள கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற 33 இணையதள கருத்தரங்குகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய்பட் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884096 

**************

SM/PLM/RS/KRS


(रिलीज़ आईडी: 1884250) आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu