மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டுக்கான கொள்கை

Posted On: 16 DEC 2022 1:36PM by PIB Chennai

தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (நாஸ்காம்) தரவுகளின்படி, இந்திய  தகவல் தொழில்நுட்பம், தொழில்நடைமுறை மேலாண்மை பிரிவில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட  ஏற்றுமதி விவரம் தரப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டில் 149 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கும் 2020-21-ல் 152 பில்லியன் டாலர் அளவுக்கும், 2021-22-ல் 178 பில்லியன் டாலர் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட அதிக வாய்ப்புள்ள சேவைகள் பிரிவில் வளர்ச்சி அடிப்படையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா, விருந்தோம்பல் சேவைகள், மருத்துவ தர பயணம், போக்குவரத்துச் சேவைகள், கணக்கீடு மற்றும் நிதிச்சேவைகள், காணொலி சேவைகள், சட்டச்சேவைகள், தகவல் சேவைகள், கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பொறியியல் சேவைகள், சுற்றுச்சூழல் சேவைகள், நிதி மற்றும் கல்வி சேவைகள் போன்ற 12 சேவைப்பிரிவுகள் செயல்திட்டத்திற்காக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியில், 2021-22-ஆம் நிதியாண்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எஸ்டிபிஐ பதிவு பெற்ற அலகுகள் ரூ.775.82 கோடி அளவுக்கு பங்களித்துள்ளன.

மாநிலங்களவையில் இன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884065

**************

SM/PKV/KPG/KRS


(Release ID: 1884170) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Telugu