தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தொலைத்தொடர்புத் துறையில் சீர்திருத்தங்கள்

Posted On: 16 DEC 2022 1:37PM by PIB Chennai

தொலைத்தொடர்புத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இத்துறையில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் நடைமுறை சீர்திருத்தங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. மொத்த வருவாய், வங்கி உத்தரவாதங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் அபராதங்களை நீக்குதல் போன்றவற்றில்  முறைப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின்  தேவைகளை கருத்தில் கொண்டு, கடன் வட்டி சலுகை மற்றும் கால அவகாசம் நீட்டிப்பு போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தொலைத் தொடர்பு வரைவு மசோதாவை 2022 செப்டம்பர் 21ம் தேதி அரசு வெளியிட்டது. தொலைத் தொடர்பு சேவைகளின் தரத்தை உயர்த்துதல், டிஜிட்டல் இடைவெளியை குறைத்தல், தொலைத்தொடர்பு கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவை தொடர்பாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் துறையினருடன் தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டில் சில கிராமப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகள் முறையாக இல்லை. இதுபோன்ற கிராமப்புற பகுதிகளில்  4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை 27.07.2022 அன்று ஒப்புதல் வழங்கியது.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பகுதிகள் உள்ளிட்டவற்றில் தொலைத்தொடர்வு கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  தரமான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும், பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து  திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசின் சவுஹான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884066

SM/PLM/RS/KRS



(Release ID: 1884158) Visitor Counter : 134


Read this release in: English , Urdu , Marathi