பாதுகாப்பு அமைச்சகம்
முன்னோட்டம் : 12705 மொர்முகோவ் ராணுவத்தில் இணைகிறது
Posted On:
16 DEC 2022 9:00AM by PIB Chennai
ஏவுகணைகளைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் வசதிகொண்ட, மொர்முகோவ் என்ற விசாகப்பட்டினம் கிளாஸ் போர்கப்பல், மும்பையில் உள்ள கடற்படைத்தளத்தில், 2022 டிசம்பர் 18ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
இதன்மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் 2-வது விசாகப்பட்டினம் கிளாஸ் டெஸட்ராயர் இது என்ற பெருமை அந்தக் கப்பலுக்குக் கிடைத்துள்ளது. பி15பி ஏவுகைணை அழிப்பானைக் கொண்ட இந்தப் போர்கப்பல், கடற்படையின் போர்கப்பல் உற்பத்தி அமைப்பு மற்றும் மஸாகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது, 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டது. 7400 டன் எடையிலான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைச் சுமந்துசெல்லும் இந்தப் போர்கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக வல்லமைகொண்ட போர்கப்பல்களுள் ஒன்றாகும். இதில் 4 சக்திவாய்ந்த டர்பைன்கள், ஒருங்கிணைந்து வாயு மற்றும் வாயு கான்பிக்ரேஷன்களை உள்ளடக்கியது.
குறிப்பாக ரேடார் குறுக்கீட்டையும் குறைக்கும் தன்மைகொண்ட இந்த போர்க்கப்பல், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை, கண்டம் விட்டு வான்வழியில் பாயும் ஏவுகணை, உள்ளிட்டவற்றைத் தாங்கிச் செல்லும் திறன் படைத்தது.
குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி அழிக்க உதவும் வகையில், இந்தக் கப்பலில், நவீன கண்காணிப்பு ரேடார் இணைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் லாஞ்சர்கள், டார்பிடோ லாஞ்சர்கள், ஏஸ்டபிள்யூ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த்திறன் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
அணு ஆயுதங்கள், ரசாயன விளைவுகள் ஆகியவற்றால் ஆன எவ்வகையான போர் சூழல்களையும் எதிர்கொள்ளக்கூடிய வசதிகளை இந்த போர்க்கப்பல் கொண்டுள்ளது. தற்சாற்பு இந்தியா என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில், 75 சதவீத வடிவமைப்பு, உள்நாட்டுத் தயாரிப்புகளை உள்ளடக்கியிருப்பது இந்த போர்கப்பலின் சிறப்பு அம்சம்.
குறிப்பாக இந்தியக் கடற்படைத்தளங்களின் மொத்தக் கப்பல்களில் 42 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பது, தற்சாற்பு இந்தியாவிற்கான முனைப்பான முயற்சியின் அடித்தளமாக அமைகின்றன.
மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுக நகரமான கோவாவின் நினைவாக, இந்த போர்கப்பலுக்கு மொர்முகோவ் எனப் பெயிரிடப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்ற 60-வது ஆண்டுவிழா 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இந்த கப்பல் முறைப்படி தனது கடற்பயணத்தைத் தொடங்க உள்ளது.
மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1883994
(Release ID: 1883994)
**************
SM/ES/KRS
(Release ID: 1884154)
Visitor Counter : 172