நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பருப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்திய விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கு அது தடையின்றி கிடைக்க இறக்குமதியாளர்களுக்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது
Posted On:
15 DEC 2022 4:12PM by PIB Chennai
நாட்டில் கூடுதலாக பருப்பு உற்பத்தி செய்வதற்காக இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மேற்கொள்ளும். 2023-ம் ஆண்டு முழுவதும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் பருப்பு வகைகள் கிடைப்பதற்கும், அதனை தடையின்றி இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு ஆதரவளிக்கப்படும் என்று நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் திரு ரோகித் குமார் சிங், இந்திய பருப்பு வகைகள் சங்கக் கூட்டத்தில் இன்று தெரிவித்தார்.
மியான்மரில் உற்பத்தி அதிகரிப்பதன் மூலம், வரும் ஆண்டுகளில் உலகளவில் பருப்பு வகைகள் அதிகளவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். ஆப்பிரிக்க நாடுகளில் பருப்பு சாகுபடி அதிகரிப்பதன் காரணமாக ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு முதல் அவைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதிகளின் முக்கியத்துவம் குறித்து அவர் மேலும் எடுத்துரைத்தார்.
**************
AP/IR/AG/KPG
(Release ID: 1883837)