சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியப் பெருந்திட்டமான பிரதமரின் விரைவு சக்தியின்கீழ் திட்டங்கள் ஆய்வு

प्रविष्टि तिथि: 15 DEC 2022 2:41PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாடும், பராமரிப்பும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  துறையின் முதன்மைப் பொறுப்பாகும். ஒடிசா மாநிலம் உட்பட சுமார் ரூ. 6,68,808 கோடி மதிப்பில், 13,858 கி.மீ தூரத்திற்கு 61 தேசிய நெடுஞ்சாலைகள் / சாலைகள் / சிறப்பு சாலைத்திட்டங்கள் தேசியப் பெருந்திட்டமான பிரதமரின் விரைவு சக்தியின்கீழ் இணையப் பக்கத்தில் ஆய்வுசெய்யப்பட்டன. தொழில், வர்த்தக அமைச்சகத்தின் தலைமையிலான வலைப்பின்னல் திட்டமிடல் குழுமத்துடனும்  கலந்தாலோசிக்கப்பட்டது.

பிரதமரின் விரைவு சக்தி அடிப்படையிலான புவிசார் தகவல்தளத்தில் கிடைக்கும் அம்சங்களுடன் விண்வெளிப் பயன்பாடு மற்றும் புவிசார் தகவல்களுக்காக பாஸ்கராச்சார்யா தேசிய கல்விநிறுவனத்தின் மூலம் விரிவான திட்ட அறிக்கை தொகுப்புக் கருவி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது புவிசார் அம்சங்கள், வனப்பகுதிகள், சூழல் பதற்றப் பகுதிகள் தொடர்பான தகவல்களைப் பரிசீலித்து தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை ஒருங்கிணைக்க உதவும்.

இந்தத் தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். ****

 

AP/SMB/KPG


(रिलीज़ आईडी: 1883808) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu