பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தைகள் திட்டத்திற்கான பிஎம் கேர்ஸ்

Posted On: 14 DEC 2022 3:09PM by PIB Chennai

கொவிட் பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம் பிஎம் கேர்ஸ் ஆகும். இந்தக் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். 23 ஆண்டுகளுக்கு இந்தக் குழந்தைகளுக்கு இது உதவும்.

பெற்றோரை இழந்த குழந்தை 18 வயதை எட்டும் போது ரூ.10 லட்சம் தொகை வருவது போல் கணக்கிடப்பட்டு குழந்தையின் பெயரில் வரவு வைக்கப்படுகிறது. இந்தத் தொகை அஞ்சலகத்தில் டெபாசிட் செய்யப்பட்டு மாத உதவித் தொகையாக 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்படும். 23 வயதை அடைந்ததும் ரூ.10 லட்சம் மொத்தமாக அளிக்கப்படும். குழந்தைகளை வளர்க்கும் உறவினர்களுக்கு வாத்ஸ்சல்ய மிஷன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4 ஆயிரம் பெற்று வருகிறார்கள். அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா அல்லது தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்க்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும் 23 வயது வரை குழந்தைகளுக்கு காப்பீடும் அளிக்கப்படுகிறது.

தமிழகத்திலிருந்து 339 குழந்தைகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலிருந்து 11 குழந்தைகள் இதில் உள்ளனர்.

**************

AP/PKV/RR/KPG



(Release ID: 1883499) Visitor Counter : 232


Read this release in: English , Urdu , Gujarati