எஃகுத்துறை அமைச்சகம்
உருக்குத் துறையில் முதலீடு
प्रविष्टि तिथि:
14 DEC 2022 2:34PM by PIB Chennai
உருக்குத் துறையை மேம்படுத்தும் சூழல்களை உருவாக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உருக்கு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு தேவையான சூழலை தேசிய உருக்குக்கொள்கை 2017 வழங்குகிறது. உருக்கு உற்பத்தியில் கொள்கை ஆதரவு வழங்குவது, உருக்கு உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது இந்த கொள்கையின் நோக்கமாகும்.
உருக்கு அமைச்சகத்தில் திட்ட மேம்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. இதில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பு உருக்குக்கான உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரூ 6322 கோடி மதிப்பிலான சிறப்பு உருக்கு உற்பத்தியை ஊக்குவிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் துபாயில் நடந்த உலக கண்காட்சியில் கலந்து கொண்டதன் மூலம், ஜப்பான், கொரியா, ரஷ்யா போன்ற உருக்கு பயன்பாட்டு நாடுகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
ரயிவே பாதுகாப்பு, பெட்ரோலியம், வீட்டுவசதி, சிவில் விமானப்போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிப் போன்ற பல்வேறு துறைகளில் உருக்கு பயன்பாட்டை அதிகரிக்க வகை செய்யும் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் வகை செய்கிறது.
உருக்கு உற்பத்தி மற்றும் கச்சாப் பொருட்கள் மீதான அடிப்படை சுங்கத்தீர்வையில் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகிறது.
சேலம் உருக்காலையில் பங்கு விலக்களுக்கு 2016ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
உலகிலேயே இந்தியா, கச்சா உருக்கு உற்பத்தியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2019-20ம் ஆண்டு 142.299 மில்லியன் டன்களாக இருந்த கச்சா உருக்குத்திறன் 2021-22-ல் 154.062 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை மக்களவையில் இன்று மத்திய உருக்கு மற்றும் ஊரகவளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு ஃபக்கான் சிங் குலஸ்தே எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்
**************
AP/PKV/RS//KPG
(रिलीज़ आईडी: 1883435)
आगंतुक पटल : 146