கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பராக் ஆற்றில் தூர்வாரும் பணி
Posted On:
13 DEC 2022 1:53PM by PIB Chennai
பராக் நதியில் பதர்பூரில் இருந்து பாங்கா வரை (10.5 கிமீ) உறுதிசெய்யப்பட்ட ஆழம் வரை தூர்வாரும் பணி இந்திய தூர்வாரும் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பதர்பூர் & கரீம்கஞ்ச் முனையங்களை மேம்படுத்துதல்/புதுப்பித்தல் பணியை மார்ச் 2023ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அஸ்ஸாமில் நீர்வழிப்பாதைகளை மேம்படுத்தும் திட்டங்கள் ரூ.770 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு உலக வங்கி இதுவரை ரூ.140 கோடி வழங்கியுள்ளது.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
**************
AP/PKV/IDS
(Release ID: 1883074)
Visitor Counter : 126