அணுசக்தி அமைச்சகம்

மார்பகப் புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் யோகாவை சேர்ப்பது அதிகபட்ச பயனைத் தருகிறது: டாட்டா புற்றுநோய் மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

Posted On: 12 DEC 2022 2:50PM by PIB Chennai

டாட்டா நினைவு மருத்துவமனை ஆய்வின்படி மார்பகப்  புற்றுநோயாளிகளுக்கான  சிகிச்சையில் யோகாவை சேர்ப்பது அதிகபட்ச பயனைத் தருகிறது. சிகிச்சையில் யோகாவை சேர்த்தது, ஒப்பீட்டளவில்  முதல் நிலை சிகிச்சைக்குப் பின் நோயில்லாமலும் அறிகுறி ஏற்படாமலும் வாழ்வதில் 15 சதவீத அளவிற்கும் சிகிச்சை முடிந்தபின் ஒட்டுமொத்த வாழ்வில் 14 சதவீத அளவிற்கும் முன்னேற்றம் காணப்படுகிறது. 

யோகா ஆலோசகர்கள், மருத்துவப்  பயிற்சியாளர்கள், இயன் முறை மருத்துவர்கள் ஆகியோர் அளித்த உள்ளீடுகள் அடிப்படையில்  மார்பகப்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்  தேவையான, பொருத்தமான யோகா கவனத்துடன் தெரிவு செய்யப்பட்டுள்ளது.   அவர்களுக்கான பல்வேறு சிகிச்சை முறைகள் மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கையை கவனத்தில் கொண்டு முறைப்படியான  ஓய்வுடன் லேசான மூச்சுப் பயிற்சியுடன் யோகாசனங்களும்  பிராணாயாமமும்  யோகா சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ள. இந்த சிகிச்சை முறை தகுதியும்  ஆழ்ந்த அனுபவமும் உள்ள  யோகா பயிற்சியாளர்களால் வகுப்புகள் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.  கூடுதலாகக்  கையேடுகளும் இதற்கான சீடிக்களும் வழங்கப்பட்டன. 

கடுமையான மேற்கத்திய  மருத்துவ சிகிச்சை முறையில், இந்தியப் பாரம்பரிய முறையை இணைப்பது மூலம்  நோயைக் குணப்படுத்தும் முதலாவது உதாரணமாக இது இருக்கிறது.  மார்பகப்  புற்று நோய்க்கு யோகாவின் பயன்பாடு என்பது மருத்துவ நடைமுறையில் முக்கிய மைல் கல்லாக உள்ளது. மார்பகப் புற்றுநோய் என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொதுவான புற்றுநோயாக உள்ளது.  இது பெண்களிடம் இரண்டு விதமான மன உளைச்சல்களை ஏற்படுத்துகிறது.  முதலாவது  வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புற்றுநோய் குறித்த அச்சம். இரண்டாவது இதற்கான சிகிச்சைகளால் ஏற்படும் பக்க விளைவுகள்.  தீவிர யோகா பயிற்சியால் மிகவும் தரமான வாழ்க்கை பராமரிக்கப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளதும்,  எண்ணிக்கை அளவில்  நோய் மீண்டும் பாதிக்காமலும், இறப்பு இல்லாமலும் 15 சதவீத அளவிற்கு அபாயத்தைக்  குறைத்திருப்பதும் கூட மனநிறைவைத்  தருகிறது. 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற, மிகவும் கௌரமிக்க மார்பகப் புற்றுநோய் மாநாடுகளில் ஒன்றான சேன் ஆன்டோனியோ மார்பகப் புற்றுநோய் கருத்துக்கோவை நிகழ்வில், புற்றுநோய் சிகிச்சையில் யோகாவின் தாக்கத்தை ஆய்வு செய்ததில் மிக முக்கியமான விளைவுகள் பற்றி டாக்டர் நீட்டா நாயர் விவரித்தார். ஆயிரக்கணக்கான ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த மாநாட்டில் சில மட்டுமே ஸ்பாட்லைட் விவாதத்திற்குத்  தெரிவு செய்யப்பட்டன.  புதுமையான தலையீடும்  மார்பகப்  புற்றுநோயிலிருந்து குணமடைய  முதன்முறையாக இந்தியாவின் தலையீட்டுத் தாக்கத்தின் விளைவுகளும்  நமது ஆய்வை இத்தகைய விவாதத்திற்கு தகுதியுடையதாக மாற்றி  இருக்கிறது.

******

SRI/SMB/IDS

 



(Release ID: 1883031) Visitor Counter : 114