ஜல்சக்தி அமைச்சகம்

குடிநீரின் மாசுபாடு

Posted On: 12 DEC 2022 4:47PM by PIB Chennai

தண்ணீர் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால் குடிநீர் விநியோகத் திட்டங்கள் தொடர்பாகத் திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், அமல்படுத்துதல் ஆகியவை மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் அதிகார வரம்புக்குள் உள்ளன. அனால், 2024க்குள் நாடு முழுவதும் ஊரகக் குடும்பங்கள் அனைத்திற்கும் போதிய அளவுக்கு, தரமானக் குடிநீர் வழங்கும் குழாய் இணைப்புக்காக முந்தைய தேசிய ஊரகக் குடிநீர் திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் இயக்கம் என  மத்திய அரசால்  2019 ஆகஸ்டிலிருந்து அமலாக்கப்படுகிறது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 16.97 லட்சம் கிராமப்புற குடியிருப்புகளில், குடிநீரில் உள்ள ஆர்சனிக், ஃபுளூரைடு, இரும்பு, உப்புத்தன்மை, நைட்ரேட் மற்றும் கன உலோகங்கள் ஆகியவற்றின் மாசுபாட்டால்  குடிநீரின் தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை, 25,716 (1.51%) மட்டுமே.

ஜல் சக்தி இயக்கத்தின்  தொடக்கத்திலிருந்தே நீர் பாதுகாப்பு முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இந்த விதிமுறைகளின்படி பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை கண்டிப்பாக உறுதி செய்ய மாநிலங்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாநில அளவில் நீரின் தரம் குறித்த நடவடிக்கையை எளிதாக்க ஜல் சக்தி இயக்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தகவலை  ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

AP/SMB/IDS

**************



(Release ID: 1882900) Visitor Counter : 119


Read this release in: English , Urdu