குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உதயம் சக்தி இணையதளத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள்
प्रविष्टि तिथि:
12 DEC 2022 1:32PM by PIB Chennai
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் பெண் தொழில்முனைவோர்களுக்கு மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் நிதித்திட்டங்கள், கொள்கைகள் குறித்த தகவல்களை உதயம் சக்தி இணையதளம் (https://udyam-sakhi.com) அளிக்கிறது.
அக்டோபர் 2022 வரை உதயம் சக்தி இணைய தளத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோர்களின் மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி ராணிப்பேட்டையில் 334 பேர், சேலத்தில் 163 பேர், திருவண்ணாமலையில் 210 பேர், வேலூரில் 360 பேர் என மொத்தம் 1067 பெண் தொழில்முனைவோர்கள் அக்டோபர் 22 வரை உதயம் சக்தி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா, எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார்.
**************
Sri/IR/AG/IDS
(रिलीज़ आईडी: 1882726)
आगंतुक पटल : 182